உக்ரைன், ரஷிய நாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன்

இந்திய மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லியில் உக்ரைன், ரஷிய நாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.

Update: 2022-03-01 11:49 GMT

புதுடெல்லி,

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷிய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.

ஏற்கெனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய ராணுவத்தினர் அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மீதும் ரஷியப் போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருகின்றனர். இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கார்கிவ் பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி இந்திய மாணவர் பலியானது பெரும் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

உக்ரைனில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாணவர் நவீன் சேகரப்பாவின் குடும்பத்தினருக்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவரின் குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் கர்நாடக முதல்-மந்திரி ஆறுதல் கூறினார். நவீனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்காக அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.

இதனிடையே உக்ரைனின், கெர்ஸன் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 
குண்டுவெடிப்பில், கட்டிடத்தின் 2வது மற்றும் 3வது தளங்கள் தீப்பிடித்தன. தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் வரும் தகவல்கள் தெரிக்கின்றன.

இந்நிலையில், உக்ரைனில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பெங்களூருரை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்த விவகாரத்தில்  டெல்லியில் உக்ரைன், ரஷிய நாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.   இருநாட்டு தூதர்களும் நேரில் அழைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்