பூஸ்டர் டோசாக பயன்படுத்த கோவோவேக்ஸ் தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை
அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.;
புதுடெல்லி,
அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவிலும், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கும் வினியோகிக்கிற உரிமையை புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்துக்கு வழங்கி உள்ளது.
இந்திய சீரம் நிறுவனம் கோவோவேக்ஸ் என்ற பெயரில் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகிக்க உள்ளது. இந்த தடுப்பூசியை பூஸ்டர் டோசாக செலுத்துவதற்கான 3-ம் கட்ட பரிசோதனையை நடத்துவதற்கு இந்த நிறுவனம், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.
இந்த தடுப்பூசியை பெரியவர்களுக்கு செலுத்துவதற்கான அவசர பயன்பாட்டு அனுமதியை கடந்த டிசம்பர் மாதமே இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கி விட்டது நினைவுகூரத்தக்கது.