மணிப்பூர் தேர்தல்: செல்வாக்கு பெற்ற 'சூப்பர் போலீசுக்கு எதிராக அமித்ஷா வீடு வீடாக பிரசாரம்

மணிப்பூர் தேர்தலில் போட்டியிடும் பெண் 'சூப்பர் போலீஸ்' தொகுதியில் செல்வாக்கு காரணமாக அவரை எதிர்த்து போட்டியிடும் மந்திரிக்கு ஆதரவாக அமித்ஷா வீடு வீடாக பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2022-02-26 11:16 GMT
கவுகாத்தி:

மணிப்பூரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை வேட்டையாடிய பெண் 'சூப்பர் போலீஸ்'   பிருந்தா தூணோஜம் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.

உள்துறை மந்திரி  அமித் ஷா, இம்பாலின் கிழக்கில் உள்ள யாயிஸ்குல் சட்டமன்றத் தொகுதியில் அவருக்கு எதிராக வீடு வீடாக பிரசாரம் செய்தார். பிருந்தா தூணோஜம் செல்வாக்கை தொடர்ந்து.பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய உள்துறை மந்திரி அங்கு வீடு வீடாக   பிரசாரம் செய்ய நேரிட்டு உள்ளது.  இருப்பினும், பிருந்தா தூணோஜம்  பதற்றமடையவில்லை.

பா.ஜனாதாவின் பதவியில் இருக்கும் மந்திரிக்கு  ஆதரவாக மத்திய மந்திரி எனக்கு எதிராக பிரசாரம் செய்ய செய்ததை  நான் பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். எனது போராட்டம் போதைப்பொருள் மற்றும் ஊழலுக்கு எதிரானது. ஒரு போலீஸ் அதிகாரியாக என்னால் மக்களுக்கு அதிகம் செய்ய முடியவில்லை. மாநில சட்டசபையில் தாக்கத்தை உருவாக்குங்கள். அதனை நான் இதன் மூலம் செய்ய விரும்புகிறேன். என கூறினார்.

பிருந்தா தூணோஜம் வித்தியாசமான வேட்பாளராக பார்க்கப்படுகிறார். அவரது மாமனார் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய இயக்கத்திற்கு தலைமை தாங்கினார். ஆனால் அவர் மணிப்பூர் போலீசில் போதைப்பொருளுக்கு எதிரான போரில்  பிருந்தா தூணோஜம் சிறந்த அதிகாரியாக பணியாற்றினார்.

போதைப்பொருள் கும்பலுக்கு  உதவியதாக முதல்வர்  பிரேன் சிங்கை குற்றம்சாட்டினார்.  குற்றம் சாட்டிய ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அவர் போலீஸ் துரையில் இருந்து விலகினார். தற்போது, ​​பா.ஜனதாவின்  தற்போதைய எம்.எல்.ஏ.வும், மணிப்பூர் சட்ட மந்திரியுமான தோக்சோம் சத்யபிரதா சிங்கை எதிர்த்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.

43 வயதான பிருந்தா தூணோஜம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளார். அவர் 2018 இல் ரூ.27 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றிய உயர்மட்ட வழக்கிற்குப் பிறகு பிரபலமானார். அவர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைமை அதிகாரியாக இருந்தார். அதே ஆண்டு பிரேன் சிங் அரசு அவருக்கு ஒரு துணிச்சலுக்கான  விருதை வழங்கியது.

இருப்பினும், 2020 ஆம் ஆண்டில், முதல் மந்திரியுடன் ஏற்பட்ட  கருத்து வேறுபாட்டையடுத்து, அந்த விருதை அவர்  திருப்பி அளித்தார். அதே போதைப்பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விடுவிக்க முதல் மந்திரி உதவியதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகள்