‘சமாஜ்வாதியின் சைக்கிளை பஞ்சர் ஆக்குவோம்’ யோகி ஆதித்யநாத் அனல் பறக்கும் பிரசாரம்!!

பகுஜன் சமாஜ்வாதி கட்சி யானை சின்னத்தை வைத்துள்ளது. அவர்கள் அந்த யானையை போல் ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேசன் பொருட்களை விழுங்குபவர்கள்.

Update: 2022-02-26 10:26 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அகமதாபாத் நகரில் அவர் தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார்.

“பகுஜன் சமாஜ்வாதி கட்சி யானை சின்னத்தை வைத்துள்ளது.  அவர்கள் அந்த யானையை போல் ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேசன் பொருட்களை விழுங்குபவர்கள்.

சமாஜ்வாதி கட்சிக்கு சைக்கிள் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சிக்கிள்களை எளிதில் பஞ்சர் ஆக்கிவிடலாம்.

இவர்களை போன்றவர்களுக்காகவே நாங்கள் புல்டோசர் இயந்திரங்களை வைத்துள்ளோம். இந்த புல்டோசர்களை பயன்படுத்தி கட்டிடங்களை கட்டலாம், அதேசமயம் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவோரின் (மாபியாக்கள், ஊழல் மந்திரிகள்) கரங்களை ஒடுக்கலாம்” என்று ஆவேசமாக கூறினார்.

அவருடைய இந்த பேச்சால் ‘பாபாவின் புல்டோசர்கள்’ என்று குறிப்பிட்டு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

மேலும், “ஆளும் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை வென்று  மாபெரும் சக்தியுடன் ஆட்சியமைக்கும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். அதேபோல 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்றார்.

மேலும் செய்திகள்