அசாமில் ரூ.7 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
அசாமில் ரூ.7 கோடி மதிப்பிலான போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கர்பி அங்லோங்,
அசாமின் கர்பி அங்லோங் மாவட்டத்தில் போகாஜன் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான 2 பேரை போலீசாரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்களிடம் இருந்து 1.04 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஹெராயின் வகையை சேர்ந்த அந்த போதை பொருள் ரூ.7 கோடிக்கும் கூடுதலான மதிப்புடையது என போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.