உக்ரைன் போரால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் - நிர்மலா சீதாராமன்

உக்ரைன் போரால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.;

Update: 2022-02-25 20:56 GMT
மும்பை, 

மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்த வருடாந்திர ஆசிய பொருளாதார கலந்துரையாடல் நிகழ்ச்சி, மும்பையில் நடைபெற்றது. அதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது:-

உலகில் உருவாகியுள்ள புதிய சவால்கள் (உக்ரைன் போர்) இந்தியாவின் வளர்ச்சிக்கு சவாலாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது. அதுபோல், உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலக அமைதியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக எந்த போரும் உணரப்பட்டது இல்லை.

விரைவில் ஏதேனும் ஒருவகையில் அமைதி திரும்பும் என்று நம்புகிறோம். எந்த இடையூறும் இல்லாமல் இருந்தால்தான், பொருளாதாரம் மீள்வது நிலையானதாக இருக்கும். அதற்கு அமைதி அவசியம். ஆனால், இந்த நிகழ்வுகளால் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பொருளாதாரம் மீண்டு வருவது கடுமையாக பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்