ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்- 24 மணிநேர போராட்டத்திற்குப்பின் உயிருடன் மீட்பு
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த சிறுவனை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் நேற்று மாலையில் விளையாடிக் கொண்டிருந்த குட்டு என்று நான்கு வயது சிறுவன் தவறுதலாக 50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்தான். இதுபற்றி தகவல் அறிந்த சிகார் மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர், ஆழ்துளைக்கிணற்றிற்கு அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றில் சிறுவன் பாதுகாப்பாக இருக்க குழாய்கள் மூலம் ஆக்ஸிஜனும் வழங்கப்பட்டது. அதே நேரத்தில், சிசிடிவி கேமராக்கள் மூலம் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டான்.
24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பேரிடர் மீட்புப்படையினர், இன்று இரவு 7 மணியளவில் வெற்றிகரமாக சிறுவனின் இடத்தை அடைந்து பத்திரமாக சிறுவனை மீட்டனர். சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டான்.