16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காங்கிரஸ் பிரமுகர் போக்சோவில் கைது

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காங்கிரசின் இளைஞர் அணித் தலைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-02-25 10:43 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் அஜீப் (வயது36). இவர் காங்கிரசின் இளைஞர் அணி பிரிவின் தலைவராக உள்ளார்.  

இந்த நிலையில் அஜீப் தனது நணபர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். இதில் அஜீப்பின் நண்பர் அதிகமாக மது அருந்தியதால் மயங்கி விழுந்து உள்ளார்.

இதனால் தனது நண்பரை வீட்டுக்கு கொண்டு சேர்ப்பதற்காக அஜீப் அவரது வீட்டுக்க சென்று உள்ளார். மயக்கத்தில் இருந்த தனது நண்பரை ஒரு அறையில் படுக்க வைத்துவிட்டு அஜீப் வெளியே வந்து உள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த ஒரு சிறுமியை அஜீப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், கண்ணூர் போலீசாரிடம்  புகார் அளித்துள்ளார்.

பின்னர் அஜீப் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்