இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது - ரஷியா

உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் தகவல் தெரிவித்துள்ளதாக ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

Update: 2022-02-25 08:34 GMT
கோப்புக்காட்சி
மாஸ்கோ,

இரண்டாவது நாளாக ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தநிலையில்,  உக்ரைனில் கல்வி மற்றும் வேலைக்காகச் சென்ற பிற நாட்டினரும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மத்திய அரசு சார்பிலும் டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள், பணியாளர்களை பாதுகாப்புடன் மீட்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி நாடுகளின் வழியே இந்தியர்களை மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் இருந்து தரைவழியாக ருமேனியா, ஹங்கேரி நாடுகளுக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக முதற்கட்டமாக இரண்டு விமானங்களை மத்திய அரசு, ருமேனியாவிற்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில்,  உக்ரைன் மீதான தாக்குதல் குறித்துபிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விரிவாக விளக்கினார். பிரதமர் மோடி இதற்காக நன்றி தெரிவித்ததுடன், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றி கோரிக்கை விடுக்க, அதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டதாக புதின் கூறியதாக  ரஷிய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்