உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை - பாதுகாப்புத்துறை மந்திரி தகவல்

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-24 12:15 GMT
புதுடெல்லி,

உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். 

ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

மேலும், உக்ரைனில் போர் பதற்றத்தை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகக்கூடாது எனவும் இந்திய அமைதியை விரும்புவதாகவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்