கர்நாடகாவில் இன்று 667 பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் இன்று மேலும் 667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,38,699 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,866 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 1,674 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38,89,418 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை மாநிலத்தில் 9,378 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.