வங்கிகள், ரெயில்வே தனியார் மயமாக்கலுக்கு வருண் காந்தி எதிர்ப்பு

வங்கிகள், ரெயில்வே தனியார் மயமாக்கலுக்கு வருண் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-22 20:20 GMT
புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தியின் மகனும், பா.ஜ.க. எம்.பி.யுமான வருண் காந்தி, 3 வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு என பல பிரச்சினைகளில் சமீப காலமாக பொதுவெளியில் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். இந்த கருத்துகள் யாவும் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுடன் ஒத்து போகவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 

அந்த வகையில் தற்போது அவர் வங்கிகள் மற்றும் ரெயில்வேயை தனியார் மயமாக்கினால் என்ன ஆகும் என்பது பற்றி டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

வங்கிகளையும், ரெயில்வேயையும் தனியார்மயமாக்குவது மட்டும் 5 லட்சம் ஊழியர்களின் கட்டாய ஓய்வுக்கு வழிவகுத்து விடும்.ஒவ்வொரு வேலை இழப்பும், லட்சக்கணக்கான குடும்பங்களை நம்பிக்கை இழக்கச்செய்யும். பொது நல அரசு, பொருளாதார சமத்துவமின்மையை உருவாக்குகிற, முதலாளித்துவத்தை ஊக்குவிக்கிற நடவடிக்கைகளை ஒருபோதும் எடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்