ரஷியா - உக்ரைன் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும்: ராஜ்நாத் சிங்

இந்தியா அமைதியை மட்டுமே விரும்புகிறது. நாங்கள் எப்போதும் உலக அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம் என ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Update: 2022-02-22 10:03 GMT
பல்லியா, 

ரஷியா - உக்ரைன் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு இடையே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறியதாவது;- “ 

கிடைத்துள்ள தகவலின் படி அமெரிக்க அதிபர், ரஷிய அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு தயராக  இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தனது சார்பாக சில முயற்சிகளை எடுத்துள்ளார். 

எந்த வகையிலும் அமைதியை மட்டுமே நிலைநாட்ட இந்தியா விரும்புகிறது.  பேச்சுவார்த்தை நடக்கும் பட்சத்தில் எப்படியும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். இந்தியா அமைதியை மட்டுமே விரும்புகிறது. நாங்கள் எப்போதும் உலக அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம்” என்றார்.

மேலும் செய்திகள்