இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தி சாதனை!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Update: 2022-02-22 06:39 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 175.84 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 35 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் 1,98,99,635 தடுப்பூசி மையங்கள் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 35,50,868 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து இன்று காலை 7 மணிவரை நிலவரப்படி மொத்தம் 175 கோடியே 83 லட்சத்து 27 ஆயிரத்து 441 (175.83 கோடி)  டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

 *18(18-44) வயதுக்கு மேற்பட்டவர்களில் 55 கோடியே 6 லட்சத்து  26 ஆயிரத்து127 முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள்.  43 கோடியே 73 லட்சத்து 36 ஆயிரத்து 329 இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள்.

 *45(45-59) வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 கோடியே 20 லட்சத்து 82 ஆயிரத்து 455 முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள்.  17 கோடியே 86 லட்சத்து 67 ஆயிரத்து 750  இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள்.

 *60 வயதுக்கு மேற்பட்டவர்களில்  12 கோடியே 62 லட்சத்து 49 ஆயிரத்து 050  முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள்.  11 கோடியே 13 லட்சத்து 615  இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள்.

 *18(15-18) வயதுக்கு கீழ் உள்ளவர்களில்  5 கோடியே 38 லட்சத்து 88 ஆயிரத்து 975  முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள்.  2 கோடியே 28 லட்சத்து 28 ஆயிரத்து 488  இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள்.

மேலும் செய்திகள்