உ.பி: ருசிகரம்; மாறி மாறி காலில் விழுந்து மரியாதை - இணையத்தில் வைரலாகும் வீடியோ
உன்னவ் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார மேடையில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்கிய பாஜக நிர்வாகியை, வேண்டாம்,வேண்டாம் என பிரதமர் மோடி சைகை காட்டி பதிலுக்கு அவரது கால்களை தொட்டு வணங்கினார்.
உன்னவ்,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
அடுத்தடுத்த கட்டங்களுக்கான பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. பிரதமர் மோடி உ.பி-யில் பேரணிக்கு வந்தபோது, உ.பி. பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், பாஜகவின் உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய இருவரும் பிரதமருக்கு ராமர் சிலையை வழங்கினர்.
பிரதமர் மோடிக்கு ராமர் சிலையை பரிசளித்தபோது, பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கினார் அவதேஷ் கட்டியார். பிரதமர் மோடி உடனே தன்னுடைய கால்களைத் தொட வேண்டாம் என்று சைகை காட்டி அவரது கால்களில் தொட்டு வணங்கினார். அவதேஷ் கட்டியார், முன்பு உன்னாவ் மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
"प्रधानसेवक" pic.twitter.com/8BPL9Xolbe
— Sambit Patra (@sambitswaraj) February 21, 2022