இந்தியா-ஓமன் விமானப்படைகள் கூட்டுப் பயிற்சி - நாளை தொடங்குகிறது
இந்தியா-ஓமன் விமானப்படைகளின் கூட்டுப் பயிற்சி நாளை தொடங்க உள்ளது.
புதுடெல்லி,
இந்தியா-ஓமன் ஆகிய இரு நாடுகளின் விமானப்படைகள் இணைந்து கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன. இந்த பயிற்சி நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் தொடங்குகிறது.
இந்த பயிற்சியில் கலந்துகொள்வதற்காக ஓமன் நாட்டின் விமானப்படை வீரர்கள் நேற்று டெல்லி வந்தடைந்தனர். அவர்கள் 25-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த பயிற்சியை மேற்கொள்வர் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.