உத்தவ் தாக்கரேவுடன் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் சந்திப்பு
தெலுங்கானா முதல் மந்திரியுடன் தொலைபேசியில் பேசிய உத்தவ் தாக்கரே, அழைப்பு விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.;
மும்பை,
மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் இன்று சந்தித்தார். பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளை தேசிய ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது.
உத்தவ் தாக்கரேவின் அழைப்பை ஏற்று இன்று மும்பையில் உள்ள அவரது இல்லத்துக்கு சந்திரசேகர் ராவ் வருகை தந்தார். அண்மையில் தெலுங்கானா முதல் மந்திரியுடன் தொலைபேசியில் பேசிய உத்தவ் தாக்கரே, அழைப்பு விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இன்று வெளியிடப்பட்ட செய்தியில், உத்தவ் தாக்கரே - சந்திர சேகர் ராவ் சநதிப்பு பாஜகவுக்கு எதிரான தேசிய அளவிலான அரசியல் ஒற்றுமையை துரிதப்படுத்தும் என்றார். தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத் பவாரையும் இன்று சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேச உள்ளார்.