திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவைக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவைக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2022-02-20 09:58 GMT
திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள். 

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. வஸ்த்ர அலங்கார சேவைக்கான கட்டணம் ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாகவும், கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆகவும் அதிகரிக்க தேவஸ்தான திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்