நடிகர் சோனு சூட்டின் கார் பறிமுதல்; வீட்டை விட்டு வெளியேற தடை: அதிகாரிகள் எச்சரிக்கை

வாக்கு மையத்திற்குள் நுழைய முயன்ற நடிகர் சோனு சூட்டின் காரை மடக்கி, அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

Update: 2022-02-20 09:44 GMT


மொகா,


பஞ்சாப் மாநிலத்தில் 23 மாவட்டங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.  இத்தேர்தலில் 1,304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  2.14 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் பிரபல நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மொகா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.  இந்த நிலையில், வாக்கு மையம் ஒன்றிற்குள் நுழைய நடிகர் சோனு சூட் முயன்றுள்ளார்.

இதற்காக காரில் வந்த அவரை மடக்கி, அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  அவர் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது என மொகா மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி பிரதீப் சிங் கூறியுள்ளார்.

எனினும், அகாலிதளம் உள்பட எதிர்க்கட்சிகளால் பல்வேறு வாக்கு மையங்களில் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன என எங்களுக்கு தெரிய வந்தது.  சில மையங்களில் பணம் வழங்கப்பட்டு உள்ளது.

அதனால், தேர்தல் முறையாக நடைபெறுகிறதா? என சோதனை செய்வதும், அதனை உறுதி செய்வதும் எங்களுடைய கடமை.  அதனாலேயே நாங்கள் வெளியே செல்ல வேண்டி இருந்தது என நடிகர் சூட் கூறியுள்ளார்.  இப்போது நாங்கள் வீட்டில் உள்ளோம்.  எனினும், தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்