மும்பை விமான நிலையத்தில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

மும்பை விமான நிலையத்தில் ஊடுருவல் முயற்சியை மத்திய தொழில் பாதுகாப்பு படை முறியடித்து உள்ளது.;

Update: 2022-02-19 08:57 GMT

மும்பை,


மராட்டியத்தின் மும்பை நகரில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு வாயில் 27ல் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது.  இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை கண்டறிந்து முறியடித்து உள்ளது.

இந்த ஊடுருவலில் ஈடுபட்ட நபரை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.  இதனை உறுதி செய்துள்ள விமான பாதுகாப்பு அமைப்பு, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்