உல்லாசத்திற்கு மறுத்த நண்பனின் மனைவி கொலை: உடலை ஷோபாவிற்குள் மறைத்த வாலிபர்

உல்லாசத்திற்கு மறுத்த நண்பனின் மனைவியை கொலை உடலை ஷோபாவிற்குள் மறைத்த வாலிபர்

Update: 2022-02-18 10:34 GMT
அம்பர்நாத்:

மராட்டிய மாநிலம் மும்பை டோம்பிவிலியை சேர்ந்த பெண் சுப்ரியா ஷிண்டே. இவர் கடந்த 15-ந்தேதி தனது வீட்டில் சோபாவிற்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் இருந்தார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்த ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். 

சுப்ரியா ஷிண்டே வீட்டின் வெளியே கொலையாளி விட்டு சென்ற காலணி இருந்ததை கண்டனர். இது பற்றி சுப்ரியா ஷிண்டேவின் கணவரிடம் விசாரணை நடத்தியதில் அவரின் நண்பரான நவிமும்பையை சேர்ந்த விஷால் தாவார் (வயது28) என்பவரின் காலணி என தெரியவந்தது. ஏனெினில் 2 பேரும் கடையில் ஒரே மாதிரி காலணிகளை வாங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் விஷால் தவாரை பிடித்து விசாரித்ததில் அவர் தான் சுப்ரியா ஷிண்டேவை கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

சம்பவத்தன்று சுப்ரியாவின் கணவர் வேலைக்காக வெளியே சென்றிருந்தார். அவரது மகன் பள்ளிக்கூடம் சென்றிருந்தான். வீட்டில் தனிமையாக இருந்த சுப்ரியா ஷிண்டேவை சந்திக்க விஷால் தாவார் வந்தார். 

அங்கு அவரிடம் உல்லாசமாக இருக்க வருமாறு தெரிவித்தார். இதனை கேட்ட சுப்ரியா ஷிண்டே மறுத்து வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கண்டித்தார். ஆத்திரமடைந்த விஷால் தவார் அங்கிருந்த நைலான் கயிற்றினால் அவரது கழுத்தை இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி சுப்ரியா ஷிண்டே உயிரிழந்ததால் உடலை மறைக்க ஷோபாவிற்குள் மறைத்து விட்டு தப்பி சென்றதாக தெரியவந்து உள்ளது.

மேலும் செய்திகள்