நான் பகத்சிங்கின் தீவிர ஆதரவாளன் - அரவிந்த் கெஜ்ரிவால்

நான் பகத்சிங்கின் தீவிர ஆதரவாளன் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-02-18 07:49 GMT
சண்டிகர்,

177 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவர் பேசுகையில், 100 ஆண்டுகளுக்கு முன் பகத்சிங்கை பிரிட்டிஷார் பயங்கரவாதி என்று கூறினர். நான் பகத்சிங்கின் தீவிர ஆதரவாளன். வரலாறு இன்று மீண்டும் திரும்புகிறது. தற்போது ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து பகத்சிங்கின் சீடனை (கெஜ்ரிவால்) பயங்கரவாதி என்கின்றனர்.  

மேலும் செய்திகள்