அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு: 38 பேருக்கு மரண தண்டனை; 11 பேருக்கு ஆயுள்
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி என அறிவிக்கபட்ட 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனை; 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
அகமதாபாத்
குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றன அகமாதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சுமர் 70 நிமிட இடைவெளியில் 21 வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தொடர் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 240 பேர் காயம் அடைந்தனர். பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கில் வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 49 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது. 26 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விவரம் இன்று அறிவிக்கபட்டது.
49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கபட்டு உள்ளது. 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.