யூனியன் பிரதேசங்கள், மாநிலங்கள் கைவசம் 11.73 கோடி கொரோனா டோஸ்கள்
நாட்டில் 11.73 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் கைவசம் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இதுவரை நாட்டில் 11.73 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் கைவசம் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
இதுவரை மொத்தம் 171.67 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இலவச அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.