கொரோனா சிகிச்சைக்கு வந்த சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய மருத்துவமனை ஊழியர் - 61 பேர் கைது

ஆந்திர மாநிலம் குண்டூரில் கொரோனா சிகிச்சைக்கு வந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மருத்துவமனை ஊழியர் உட்பட 61 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-02-17 05:55 GMT
திருப்பதி

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த தாய் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருவரும் சிகிச்சைக்காக  குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமியின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். 

பின்னர் சிறுமி மற்றும் மருத்துவனையில் சிசிக்சை பெற்று வந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் சுவர்ணகுமாரி என்பவர் உங்கள் மகளுக்கு ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்றை நாட்டு மருந்து மூலம் குணப்படுத்திவிடலாம் என்று சிறுமியின் தந்தையிடம் தெரிவித்து உள்ளார்.

இதனை உண்மை என்று நம்பி அவர் தனது குழந்தையை சுவர்ணகுமாரியிடம் ஓப்படைத்து உள்ளார். பின்னர் சிறுமியை அழைத்து சென்ற சுவர்ணகுமாரி விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர் , ஐதராபாத் போன்ற இடங்களுக்கு கடத்தி சென்று பாலியில் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.

இதனால் சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. பின்னர் அந்த கும்பலிடம் இருந்த தப்பித்த சிறுமி குண்டூரில் உள்ள தனது தந்தையிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அவர் குண்டூர் போலீசாரிடம் தனது மகளுக்கு நடந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார்.

விரைந்து செயல்பட்ட குண்டூர் போலீஸ் சூப்பிரண்ட் ஆரிப் கபீஸ் சிறுமியை பாலியில் தொழிலில் தள்ளிய சுவர்ணகுமாரி உட்பட 21 பேரை அதிரடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை 6 மாதம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர்  இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

கோர்ட்டின் உத்தரனை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆந்திர மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 61 போரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஆந்திராவில் கொரோனா சிகிச்சைக்கு வந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 61 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்