நாளை தொடங்குகிறது கேரள சட்டசபை கூட்டம்..! மார்ச் 11-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

கவர்னர் உரையுடன் கேரள சட்டசபை கூட்டம் நாளை தொடங்குகிறது. மார்ச் 11-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.;

Update: 2022-02-16 21:27 GMT
கோப்புப்படம்
திருவனந்தபுரம், 

கேரள சட்டசபை சபாநாயகர் ராஜேஷ் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. 21-ந் தேதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டி.தாமஸ் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும். அன்றைய தினம் மற்ற அலுவல்கள் நடைபெறாது. 

அதன் பிறகு 22, 23, 24-ந் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். 25-ந் தேதி முதல் மார்ச் 10-ந் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறாது. மார்ச் 11-ந் தேதி நிதி மந்திரி பாலகோபால் பட்ஜெட் தாக்கல் செய்வார். அதை தொடர்ந்து மார்ச் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பட்ஜெட் குறித்தான விவாதம் நடைபெறும். 2 கட்டங்களாக நடைபெறும் இந்த கூட்டம் மார்ச் 23-ந் தேதி நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்