கொரோனா பரிசோதனைக்கு புதிய வழிகாட்டுதல் வெளியீடு..!

கொரோனா பரிசோதனைக்கு புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-16 20:00 GMT
கோப்புப்படம்
ஹமிர்பூர், 

கொரோனா பரிசோதனை உத்தியில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் வெளியிட்டுள்ளன. அதன் முக்கிய தகவல்கள்:-

* கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து இணை நோயுடன் போராடுகிறவர்கள் இடையே சமூக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

* வெளிநாடு செல்கிற தனிநபர்கள், வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவோர் அனைவரும் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்படி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

* ஆஸ்பத்திரிகளில் டாக்டரின் முடிவின்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படலாம். பரிசோதனை வசதி இல்லாத காரணத்தால் எந்தவொரு அவசர சிகிச்சையும் தாமதிக்கக்கூடாது. வேறு இடங்களுக்கும் அனுப்பக்கூடாது.

* பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் உள்பட அறுவை சிகிச்சை அல்லாத செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுவோருக்கு அறிகுறிகள் இல்லாதபோது கொரோனா பரிசோதனை தேவையில்லை.

* அறிகுறிகள் இல்லாதவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை.

* வீட்டில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்படி, ‘டிஸ்சார்ஜ்’கொள்கைப்படி வெளியேறியவர்கள், மாநிலங்களுக்கு இடையே உள்நாட்டு பயணம் மேற்கொள்வோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளத்தேவையில்லை.

மேலும் செய்திகள்