ஆற்றல் மற்றும் வள நிறுவன உலக வளர்ச்சி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை!

ஆற்றல் மற்றும் வள நிறுவனம்(டி.இ.ஆர்.ஐ.) சார்பில் உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.;

Update: 2022-02-16 17:18 GMT
புதுடெல்லி, 

ஆற்றல் மற்றும் வள நிறுவனம்(டி.இ.ஆர்.ஐ.) சார்பில்  உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. அதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

சர்வதேச சோலார் கூட்டமைப்பின் வழியாக 'ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே வழித்தடம்' என்பதே எங்களது நோக்கம். உலகளாவிய கட்டமைப்பிலிருந்து தூய்மையான ஆற்றல் கிடைப்பதை உறுதிசெய்ய நாம் பணியாற்ற வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தி தேவை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எரிசக்தியை மறுப்பது என்பது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மறுப்பதற்கு சமம் ஆகும். 

உஜ்வாலா திட்டம் மூலம் 9 கோடி வீடுகளுக்குச் சமையல் எரிவாயு  வழங்கப்பட்டுள்ளது.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விவசாயிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சோலார் பேனல்களை அமைக்கவும், அவற்றைப் பயன்படுத்தவும், உபரி மின்சாரத்தை மின் கட்டமைப்பிற்கு விற்கவும் விவசாயிகளை ஊக்குவிக்கிறோம். 

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தித்  தேவை இரு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதை மறுப்பது கோடிக்  கணக்கானவர்களின் வாழ்க்கையை மறுப்பதற்கு சமமாகும். வெற்றிகரமான காலநிலை நடவடிக்கைக்கு போதுமான நிதியுதவியும் தேவை. இதற்கு, வளர்ந்த நாடுகள் நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என பேசினார்.

மேலும் செய்திகள்