இந்தியர்களின் எரிசக்தி தேவை 2 மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு- பிரதமர் மோடி
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தி தேவை 2 மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,
உலகின் நீடித்த வளர்ச்சிக்கான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தொடக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் எரிசக்தித் தேவை இரு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை மறுப்பது கோடிக் கணக்கானவர்களின் வாழ்க்கையை மறுப்பதற்கு சமமாகும். வெற்றிகரமான காலநிலை நடவடிக்கைக்கு போதுமான நிதியுதவியும் தேவை. இதற்கு, வளர்ந்த நாடுகள் நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்த தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
ஏழைகளுக்கும் சமமாக எரிசக்தி கிடைக்க வேண்டும் என்பதே நமது சுற்றுசூழல் கொள்கையின் சாராம்சம் ஆகும். உஜ்வாலா திட்டம் மூலம் 9 கோடி வீடுகளுக்குச் சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. சோலார் பேனல்களை அமைக்கவும், அவற்றைப் பயன்படுத்தவும், உபரி மின்சாரத்தை மின் கட்டமைப்பிற்கு விற்கவும் விவசாயிகளை ஊக்குவிக்கிறோம்” என்றார்.