பஜனையில் பங்கேற்று பாட்டுப்பாடி, வாத்தியம் இசைத்து மகிழ்ந்த பிரதமர் மோடி...! - வீடியோ

ரவிதாஸ் ஜெயந்தி விழாவில் பஜனை கீர்த்தனையிலும் பங்கேற்று, பாடல்களைப் பாடி, வாத்தியங்களை இசைத்து பிரதமர் மோடி மகிழ்ந்தார்.

Update: 2022-02-16 09:43 GMT
புதுடெல்லி,

ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, கரோல் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

பஞ்சாப், அரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் ரவிதாஸ் ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் உள்ள  ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் கோவிலுக்கு இன்று காலை வந்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களின் நலனுக்காக கோவிலில் பிரார்த்தனை மேற்கொண்டார்.

தொடர்ந்து, கோவிலுக்குள் நடந்து கொண்டிருந்த பஜனை கீர்த்தனையிலும் பங்கேற்று, பாடல்களைப் பாடி, வாத்தியங்களை இசைத்து பிரதமர் மோடி மகிழ்ந்தார். தொடர்ந்து பஜனை கீர்த்தனை பாடும் பக்த குழுவினருடன் மோடி கலந்துரையாடினார்.

மேலும் செய்திகள்