பிரதமர் வீட்டு வசதி திட்டம்: 5 மாநிலங்களில் 60,000 வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5 மாநிலங்களில் 60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Update: 2022-02-15 17:22 GMT
புதுடெல்லி,

நாட்டில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் நாட்டில் அனைவருக்கும் சொந்த வீட்டினை அரசு நிதியின் மூலம் வழங்குவதை மோடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் வீட்டுவசதி திட்ட இலக்கை அடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5 மாநிலங்களில் 60,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆந்திரா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்