கூலித்தொழிலாளி மாடலான கதை...! வைரலாகும் மம்மிக்கா...!

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெண்ணக்காடு, கொடிவள்ளியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மம்மிக்கா

Update: 2022-02-15 12:04 GMT

கோழிக்கோடு

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெண்ணக்காடு, கொடிவள்ளியை சேர்ந்தவர்  மம்மிக்கா ( வயது 60)  என்ற கூலித் தொழிலாளி, பொதுவாக லுங்கியும் சட்டையும் அணிவது தான் இவரது வழக்கம் . ஒருநாள் இவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த போது புகைப்படக் கலைஞர் ஷரீக் வயலில் இவரைப் பார்த்துள்ளார். அவரைப் பார்த்தவுடன் சில போட்டோக்களை எடுத்து உள்ளார்.

பின்னர் அந்தப் புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோவுக்கு மக்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு. இது நடந்து ஒரு வாரம் ஆகிறது. 

இந்த் நிலையில்தான் ஷரீக் தனது ஆடையகத்திற்காக விளம்பர மாடலைத் தேடினார். ஒரு வார இடைவெளியில் எத்தனையோ பேரை பார்த்தாலும் அவருக்கு திருப்தி வரவில்லை. பின்னர் மம்மிக்காவிடமே கேட்டுவிட்டார். மம்மிக்காவும் ஒப்புக்கொள்ள, அவரது கெட்டப் முழுமையாக மாற்றப்பட்டது. முடி திருத்தம், பேஷியல், கோட் சூட், கூலர்ஸ் எனக் கூலாக ஐபேடுடன் லேப்டாப்புடன் மம்மிக்கா கொடுத்த போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வார இறுதியில் ஷரீக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மம்மிகாவின் மாடலிங் விளம்பரம் ஏராளமான பார்வைகளைப் பெற்றுள்ளது. 

மம்மிக்கா அளித்த பேட்டியொன்றில், தினக்கூலி வேலைக்கு மத்தியில் இதுபோன்ற மாடலிங் வாய்ப்புகள் வந்தால் அதையும் செய்ய ஆசைப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்