மராட்டியம்: தாவூத் இப்ராகிம் சகோதரி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

மராட்டியத்தில் தாவூத் இப்ராகிம் சகோதரி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-15 07:32 GMT
மும்பை,

மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம். பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் வசித்து வருகிறான்.

இதற்கிடையில், தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசினா பார்கர். இவர் மும்பையில் வசித்து வந்தார். ஹசினா பார்கர் தாவூத் இப்ராகிமுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அதேவேளை ஹசினா கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். 

ஹசினா பார்கர் மீது பணமோசடி உள்பட 88 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக மத்தியகிழக்கு நாடுகளுக்கு பணத்தை அனுப்புவது தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், மும்பையில் உள்ள ஹசினா பார்கரின் வீடு மற்றும் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

பணமோசடி, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல், ஹவாலா பணம் உள்ளிட்ட விவகாரங்கள் மற்றும் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் இதுவரை ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ஹசினா பார்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்