பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல், தடுப்பூசி செலுத்தும் பணிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் விவாதிக்கப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கடைசியாக கடந்த மாதம் முதல் வாரத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஒமைக்ரான் பரவல், 15 முதல் 18 வயதிலான சிறுவர் சிறுமியருக்கு தடுப்பூசி செலுத்துதல், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.