பிரதமர் மோடி பஞ்சாப் வருகையால் விவசாய சங்க தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

பிரதமர் மோடி, கடந்த மாதம் பஞ்சாப்புக்கு சென்றபோது, விவசாய சங்கத்தினரின் மறியல் போராட்டத்தால் டெல்லிக்கு திரும்ப செல்ல வேண்டியதாகி விட்டது.

Update: 2022-02-15 00:23 GMT

ஜலந்தர், 

பிரதமர் மோடி, கடந்த மாதம் பஞ்சாப்புக்கு சென்றபோது, விவசாய சங்கத்தினரின் மறியல் போராட்டத்தால் டெல்லிக்கு திரும்ப செல்ல வேண்டியதாகி விட்டது. அச்சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக நேற்று அவர் பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். அவர் வருகையின்போது மீண்டும் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

விவசாய சங்க தலைவர்களின் வீடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலைவரை படையெடுத்தனர். அவர்களை வீட்டுக்காவலில் வைத்தனர். அவர்கள் வீடு அமைந்துள்ள கிராமங்களை முற்றுகையிட்டனர். அங்கிருந்து யாரும் வெளியே வராதபடி, தடுபபிட்-பார்ஆல்்புகளை வைத்து மூடினர். இதனால், சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டதாக விவசாய சங்க தலைவர் அமர்ஜோத்சிங் ஜோதி குற்றம் சாட்டினார். குறிப்பாக, தோபா கிசான் சங்கர்ஷ் கமிட்டியின் தலைவர்கள் ஏராளமானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஜதேதார் காஷ்மீர் சிங் ஜான்டியாலா தலைமையில் விவசாயிகள், கருப்பு கொடி காட்ட திட்டமிட்டு இருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும் செய்திகள்