தனியாக இருந்த 87 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர்
டெல்லியில் வீட்டில் தனியாக இருந்த 87 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
டெல்லி,
டெல்லி திலக் நகரில் 87 வயது மூதாட்டி தனது 65 வயது மகளுடன் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் மகள் வெளியே சென்ற போது மர்மநபர் ஒருவர் வீட்டுற்குள் புகுந்து தனியாக இருந்த 87 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த செல்போனையும் திருடி சென்றுள்ளார்.
அவரது மகள் திரும்பி வந்து பார்த்த போது ஆடை கிழிந்த நிலையில் இருந்த மூதாட்டியை பார்த்துள்ளார். இது குறித்து அவரது மகள் போலீசில் செல்போன் திருடபட்டதாக மட்டும் முதலில் புகார் கொடுத்துள்ளதை தொடர்ந்து திருட்டு வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தனது தாயும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என திங்கள்கிழமை போலீசில் தெரித்தார். இதை தொடர்ந்து போலீசார் பாலியல் வன்கொடுமை குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிர் பிழைத்த மூதாட்டிக்கு ஆலோசனை மற்றும் தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.