இந்தூர் மத்திய சிறையில் எஃப்.எம். ரேடியோ சேனல் துவக்கம்..!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மத்திய சிறையில் புதிய முயற்சியாக எஃப்.எம். ரேடியோ சேனல் துவங்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-14 11:30 GMT
இந்தூர்,

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகள் வெளியுலகில் நடப்பதை தெரிந்து கொள்ள ஜெயில் வாணி - எஃப்.எம். 18.77' என்ற புதிய எஃப்.எம். ரேடியோ சேனல் துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் அல்கா சோன்கர் கூறுகையில், 

சிறைச்சாலைகளில் சீர்திருத்த வசதிகள் போன்று இருக்க வேண்டும் என நிர்வாகம் விரும்புகிறது. ஆகையால் உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகள், உடல் நலப் பிரச்சினைகள், பொழுதுபோக்கு குறித்து கைதிகள் அறிந்து கொள்ளும் பொருட்டு இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிய அனுமதிப் பெற்று இந்த வானொலி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்