பஞ்சாப் தேர்தல்; ‘அமரீந்தர் சிங்கை இயக்குவது பா.ஜ.க’ - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பஞ்சாப் மாநில முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கை பாஜக இயக்குகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.;

Update: 2022-02-13 12:49 GMT
சண்டிகர், 

பஞ்சாப் மாநில முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கை பாஜக இயக்குகிறது என்று காங்கிரஸ் தலைவர்  பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் இம்மாதம் 20ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பேரணிகளில் கலந்து கொண்டார். அம்மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்த  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமரீந்தர் சிங் பதவி விலகல் குறித்து முதன் முறையாக பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது, “அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். 

கடந்த 5 ஆண்டுகளாக இங்கு காங்கிரஸ் ஆட்சி நடந்தது. ஆனால் அந்த அரசு, பஞ்சாப்பில் இருந்து செயல்படாமல் டில்லியில் இருந்து செயல்பட்டது. அந்த அரசை காங்கிரஸ் இயக்கவில்லை. மறைமுகமாக பாஜக இயக்கியது. 

இந்த மறைமுக கூட்டணி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்காக தான் அமரீந்தர் சிங் கட்சியில் இருந்து வெளியேறினார். மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட தலைவரான சரண்ஜித் சிங் சன்னியை புதிய முதல்-மந்திரியாக காங்கிரஸ் நியமித்தது.” 

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்