மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரில்.. பயிற்சி செய்யும் இந்தோ-திபெத் எல்லைப் படையினர்
இந்தோ-திபெத் எல்லைப் படையினர் 18,800 அடி உயரத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ அதிகம் பரவி வருகிறது.;
டேராடூன்,
இந்திய அரசால் 1962ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தோ-திபெத் எல்லை படை, 3,488 கி.மீ தூர இந்திய எல்லை பகுதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை தவிர நக்சல் ஒழிப்பு பணி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பணி ஆகியவற்றிலும் இந்த படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த வீரர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரில் 18,800 அடி உயரத்தில் இமயமலையை ஒட்டிய பகுதிகளில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ அதிகம் பரவி வருகிறது. காண்போரை ஆச்சரியமடைய செய்யும் இந்த வீடியோவில், அந்த வீரர்கள் கையில் ஆயுதங்கள் ஏந்தியபடி பயிற்சி செய்கின்றனர்.