பாலியல் வழக்கில் கைதான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

கோட்டயம் அருகே பாலியல் வழக்கில் கைதான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-12 07:12 GMT
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம்  பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (28 வயது).  இவர் ஒரு பெண்ணை  திருமணம் செய்து கொள்வதாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்த வழக்கில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தற்போது ஜாமீனில் வெளிவந்த ஆனந்த் சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்த  நிலையில் வீட்டில் இரவு தனிமையில் இருந்த அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த கோட்டயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த ஆனந்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

மேலும் செய்திகள்