உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
உத்தரகாண்டில் அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.;
உத்தரகாசி,
உத்தரகாண்டின் உத்தரகாசியில் இன்று அதிகாலை 5.03 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கம் 28 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.