அரிசி மூடை போல் லாரியில் 1,400 கிலோ கஞ்சா கடத்தல்

ஆந்திர பிரதேசத்தில் அரிசி மூடை போல் லாரியில் 1,400 கிலோ கஞ்சா கடத்தல் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது.

Update: 2022-02-10 05:51 GMT





விசாகப்பட்டினம்,


ஆந்திர பிரதேசத்தில் போலீசார் வாகனங்களை சோதனை செய்தபோது, சந்தேகத்திற்குரிய வகையில் லாரி ஒன்று சென்றுள்ளது.  அதனை தடுத்த அதிகாரிகள் லாரியை சோதனையிட்டனர்.  இதில், அரிசி மூடை போல் லாரியில் 1,400 கிலோ எடை கொண்ட கஞ்சா வகையை சேர்ந்த போதை பொருள் கடத்தல் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.  இதேபோன்று விசாகப்பட்டினம் நகரில் சிறப்பு அமலாக்க பிரிவு மேற்கொண்ட விசாரணையில், ரூ.2 கோடி மதிப்பிலான குட்கா மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புடைய மதுபானம் ஆகியவற்றை கடத்தி சென்ற நபர்களை தடுத்து, அவர்களிடம் இருந்து அதிகளவிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.  இந்த கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்