இருதரப்பு ராணுவ உறவுகளை வலுப்படுத்த சவுதி ராணுவ தளபதியுடன் நரவனே பேச்சு

இருதரப்பு ராணுவ உறவுகளை வலுப்படுத்த சவுதி ராணுவ தளபதியுடன் நரவனே பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2022-02-09 19:37 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

சவுதி அரேபியாவின் ராணுவ தளபதி பஹத் பின் அப்துல்லா முகமது அல் முதாயரை நமது ராணுவ தளபதி எம்.எம்.நரவனே நேற்று தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருதரப்பு ராணுவ உறவை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை பலப்படுத்தவும் கூடிய அம்சங்களை அவர்கள் இருவரும் ஆராய்ந்தனர். இதை நமது ராணுவம் ஒரு டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையேயான ராணுவ உறவு கடந்த சில ஆண்டுகளாக வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. நமது ராணுவ தளபதி நரவனே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சவுதி அரேபியா சென்று வந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்