விவசாயத்திற்கு வருடாந்திர தனி பட்ஜெட் இல்லை - மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்

விவசாயத்திற்கு வருடாந்திர தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என மத்திய வேளாண் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2022-02-09 08:28 GMT
புதுடெல்லி,

விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை எனவும்  விவசாயத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் விதத்தில் மத்திய பட்ஜெட்டில் திட்டங்கள் இடம்பெறுகின்றன  என நாடாளுமன்றத்தில் வேளாண் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும், 2021ம் ஆண்டு 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 2021ம் ஆண்டு 9790.36 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்