பா.ஜ.க.வின் பொய்யான வாக்குறுதியில் மயங்கி விடாதீர்கள்; மம்தா பிரசாரம்

பா.ஜ.க.வின் பொய்யான வாக்குறுதியில் மயங்கி விடாதீர்கள் என மம்தா பிரசாரத்தில் பேசினார்.;

Update: 2022-02-08 23:23 GMT
லக்னோ,



உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தலையொட்டி சமாஜ்வாடி கட்சியை ஆதரித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அவர் மக்களிடையே பேசும்போது, பா.ஜ.க.வின் பொய்யான வாக்குறுதிகளுக்கு மயங்கி விடாதீர்கள்.

சமாஜ்வாடி கட்சியை வெற்றி பெற செய்து, பா.ஜ.க.வை தோற்கடிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டு கொள்கிறேன்.  கொரோனா சமயத்தில் உத்தர பிரதேசத்தில் கங்கையில் வீசப்பட்ட உடல்கள், ஹத்ராஸ், உன்னாவ் சம்பவங்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று அவர் பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்