“ஜியோபுக்” லேப்டாப் இந்தியாவில் விரைவில் அறிமுகம்...!
ஜியோ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக ஜியோபுக் லேப்டாப் விரைவில் அறிமுகபடுத்தபடும் என தகவல்.
மும்பை,
ஜியோ நிறுவனம் அவ்வப்போது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அப்டேட்டுகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், “ஜியோபுக்” என்ற லேப்டாப் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஜியோபுக் லேப்டாப் விண்டோஸ் 10 மூலம் இயங்கும் எனவும், இது ஒரு ARM செயலி மூலம் இயக்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜியோ லேப்டாப் மலிவு விலையில் அறிமுகபடுத்தபடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மடிக்கணினியைத் தவிர, முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் டிவி பிரிவுகளிலும் நுழையலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
ஜியோ நெட்வொர்க் மூலம் ஜியோ 4ஜி, ஜியோஃபைபர், ஜியோபோன் மற்றும் விரைவில் ஜியோ லேப்டாப், டேப்லெட் மற்றும் டிவி உள்ளிட்ட வன்பொருள் மற்றும் சேவைகளின்அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக இணைக்கபடும் என கூறப்படுகிறது.