ஓவைசி கார் மீது 3 குண்டுகள் பாய்ந்தன" - நடந்தது என்ன? அமித்ஷா விளக்கம்
ஓவைசிக்கு 'இசட் பிரிவு' பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது; ஆனால் அவர் ஏற்க மறுத்துவிட்டார் என அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.;
புதுடெல்லி,
அசாதுதீன் ஓவைசியின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். அதில்,
உள்துறை அமைச்சகம் உடனடியாக மாநில அரசிடம் இருந்து அறிக்கை எடுத்தது.
தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத 2 நபர்கள் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒவைசியின் வாகனத்தின் மீது 3 குண்டுகள் பாய்ந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை 3 பேர் நேரில் பார்த்துள்ளனர்.
ஓவைசிக்கு 'இசட் பிரிவு' பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது; ஆனால் அவர் ஏற்க மறுத்துவிட்டார். மத்திய அரசு வழங்கும் 'இசட் பிரிவு' பாதுகாப்பை ஏற்க வலியுறுத்துகிறேன் என்றார்.
தொடர்ந்து மாநிலங்களவை நாளை பிப்ரவரி 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.