ஆந்திர சாலை விபத்து: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்தார், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு உதவித் தொகையாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.;

Update: 2022-02-07 06:52 GMT
அமராவதி,

ஆந்திர மாநிலம் அனந்தபூர்-பெல்லாரி நெடுஞ்சாலையில் விடபனகல் பிளாக்கின் கடலபள்ளி கிராமத்தில் நேற்று இந்த விபத்து நடந்தது. நேற்று காலை பெல்லாரியில் நடந்த மாநில பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) செயற்குழு உறுப்பினர் கோரா வெங்கடப்பாவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு அனந்தபூர் திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது அதிவேகமாக சென்ற டிரக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த டொயோட்டா இன்னோவா கார் மீது மோதியதால் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநில சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்தார், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு உதவித் தொகையாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் பலர் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகையாக ரூ. 2 லட்சம் இறந்தவரின் உறவினர்களுக்கு வழங்கப்படும்”என அறிவிக்கபட்டுள்ளது.

மேலும் செய்திகள்