கேரளாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது! இன்று 26,729 பேருக்கு தொற்று உறுதி
அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 3,989 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 3,564 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;
திருவனந்தபுரம்,
கேரளாவில் ஒரே நாளில் 26,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 6,809 குறைவு. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 3,989 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 3,564 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 88,098 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 58,255 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கொரோனாவில் இருந்து 58,83,023 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 30.3 சதவிகிதமாக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 49,261 குணமடைந்தனர்.