பொது இடங்களில் 15 நாட்களுக்கு லதா மங்கேஷ்கரின் பாடல்கள் ஒலிபரப்பப்படும்- மம்தா பானர்ஜி
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை அரை நாள் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
கொல்கத்தா
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92.
சுமார் 20 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
லதா மங்கேஷ்கரின் உடல் இன்று மாலை 6.30 மணி அளவில் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அடுத்த 15 நாட்களுக்கு ஒவ்வொரு பொது இடங்களிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் லதா மங்கேஷ்கரின் பாடல்களை ஒலிபரப்பபட உள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார்.
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை அரை நாள் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.